இந்த பதிவில் நாம் ஆசீர்வதிக்கும் பைபிள் வசனங்கள் (Blessing Bible verses in Tamil) பார்க்கப்போகிறோம்.
1.
சிறுமை பட்டவனுக்கு
கர்த்தர் அடைக்கலமானவர்
கஷ்டப்படுகின்ற காலங்களில்
அவரே தஞ்சமானவர்.
– சங்கீதம் 9:9
2.
உன் பிள்ளைகள் எல்லோரும்
கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்
உனது பிள்ளைகளின் சமாதானம்
பெரிதாக இருக்கும்.
– ஏசாயா 54:13
3.
நீ தீமையினால் வெல்லப்படாமல்
தீமையை நன்மையால் வெல்லு.
– ரோமர் 12:21
4.
நீ உயிரோடிருக்கும் நாள் எல்லாம்
ஒருவனும் உன் முன்பு
எதிர்த்து நிற்பதில்லைனு.
– யோசு 1:5
5.
ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்;
அவர் என் கால்களை
மான் கால்களை போல் ஆக்கி
உயரமான இடங்களில் நடக்க வைப்பார்.
– ஆபகூக் 3:19
Blessing Promise Bible Verses in Tamil
6.
கஷ்டத்திலே நீ கூப்பிட்டாய்
நான் உன்னை தப்புவித்தேன்.
– சங்கீதம் 81:7
7.
தேவன் உங்களை விசாரிக்கிறவர்
அதனால் உங்கள் கவலைகளை
எல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
– பேதரு 5:7
8.
கர்த்தரின் கண்கள்
நீதிமான்கள் மேல் நோக்கி இருக்கிறது
அவருடைய செவிகள்
அவர்கள் கூப்பிடுதலுக்கு திறந்திருக்கிறது
– சங்கீதம் 34 :15
Read also – மோட்டிவேஷன் பைபிள் வசனங்கள்
9.
இதயத்தில் சுத்தமுள்ளவர்கள்
பாக்கியவான்கள்;
அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.
– மத்தேயு 5:8
10.
நீங்கள் திடமானதாயிருந்து
காரியங்களை நடத்துங்கள்
உத்தமனுக்கு கர்த்தர்
துணை என்றான்.
– 2 நாளாகமம் 19:11
House Warming Bible Verses in Tamil
11.
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்
– பிரசங்கி 3:11
12.
நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
– யோவான் 14:15
13.
அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு;
சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
– சங்கீதம் 30:5
14.
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்;
உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
– சங்கீதம் 32:8
15.
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
– சங்கீதம் 37:11
Related Post | தொடர்புடைய பதிவுகள்