Love Failure Quotes in Tamil | காதல் தோல்வி கவிதைகள்

உயிருக்கும் மேலாக நேசித்து விலகிய வலிகள் நிறைந்த காதல் தோல்வி (Love failure quotes in Tamil) கவிதைகளை இந்த பதிவில் காணலாம்.

விரைவு இணைப்புகள்

Love Failure Quotes in Tamil for Boy

1.
அவள் சென்று விடுவாள் என தெரிந்திருந்தால்,
என் வாழ்நாள் முழுவதும் இருட்டிலேயே நீந்தி கழித்திருந்துப்பேன்!

2.
காதல் இல்லாத அவளும், அவள் இல்லாத நானும் முழுமையடையாத வாக்கியங்கள்!

3.
மின்மினிப் பூச்சியாய் வந்தவள்,
கானல் நீராய் மறைந்தது ஏனோ?

4.
பணி கூட சுமையில்லை! ஆனால் பனியும் சுடுகிறது,
நீ இல்லாத இரவுகளில்!

5.
வந்த தூக்கத்தை துறத்தி விட்டு,
வராத உன்னை பார்க்கிறேன் அறை சுவற்றில் சுவரோவியமாக உன் முகம்!

Love Failure Inspirational Quotes in Tamil

6.
பழகுவது தவறில்லை, அளவுக்கு அதிகமாக பாசம் வைப்பது தான் தவறு!

7.
கண் மூடி நான் காணும் கனவே, கண் விழிக்க நான் மறுக்கக் காரணம்!

8.
பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும், மனம் வெறுத்த பின் கிடைக்கும் அன்பும் பயனற்றது.

Love Failure Girl Feeling Quotes in Tamil

9.
நினைவில் இருந்து நீங்கிவிடு. கனவில் வருவதை நிறுத்திவிடு!
கண்கள் கொஞ்சம் காய்ந்தே இருக்கட்டும்!
கண்ணீர் வராமலே காலங்கள் கழியட்டும்!

10.
அருகில் இருப்பவர் அருமை தெரிவதில்லை,
அவர்கள் அருகில் இருக்கும் வரை!

11.
நாம் நேசிக்கும் ஒருவர் நம்மை காயப்படுத்தும் போது,
ஏற்படும் வலி மரணத்திலும் கொடியது!

12.
நம்மை ஒருவர் காயப்படுத்துவது வேதனை!
அதையே நியாப்படுத்துவது நரக வேதனை.

13.
சிரிப்பதால் வலியை மறந்து விட்டேன் என்று அர்த்தம் அல்ல!
மறைத்து விட்டேன் அவ்வளவு தான்!

Love Failure Cheating Quotes in Tamil

14.
அன்று கால்கள் தடுமாறவே உன் கைகள் வந்து சேர்ந்தேன்!
இன்று உள்ளம் தடுமாறவே நீ எங்கே என தேடுகிறேன்!

15.
உன்னை நினைத்து என்னை மறந்தேன்!
எதை நினைத்து என்னை நீ மறந்தாய்!

16.
பிரிந்து போனாலும், பிரியங்கள் போகாது!
கடந்து சென்றாலும் காயங்கள் ஆறாது!

17.
கை தவறினால் பொருள் உடையும் என யோசிப்பவர்கள்,
வாய் தவறினால் மனம் உடையும் என யோசிப்பதில்லை.

காதல் தோல்வியை‌ மறந்து உங்கள் வாழ்க்கை இலக்குகளை அடைய ஊக்கமளிக்கும் தத்துவங்களை கிளிக் செய்யவும்.

Love Failure Gethu Quotes in Tamil

18.
விட்டு விடுவதல்ல, உண்மையான நேசம் விட்டுக்கொடுப்பதே!

19.
பிறர் வலியை புரிந்துக்கொள்ள முடிகிறது!
என் வலியை தான் புரிய வைக்க முடியவில்லை!

20.
என் காயங்களை என் கண்கள் கூறும் போதெல்லாம் அன்போடு ஏற்கும் என் தலையணைக்கு நன்றி பாடுவேன்.

என் காயங்கள் “தீரும் வரை அல்ல! என் காலம் தீரும் வரை!”

Love Failure Revenge Quotes in Tamil

21.
புரியாமல் பிரிந்து சென்றவர்களை விட,
புரிந்திருந்தும் பிரிந்து சென்றவர்கள் தான் இங்கே அதிகம்!

22.
அளவில்லா ஆனந்தம் தருவதும்,
அளவில்லா சோகம் தருவதும் நம் மனதிற்கு பிடித்தவர்கள் மட்டும் தான்!

23.
தொலைக்கவில்லை! இருந்தும் தேடுகிறேன்,
நேற்று இருந்த உன்னையும் என்னையும்!

24.
வேண்டும் என்று விரும்பிய ஒன்றை,
வேறு ஒருவர் கைகளில் பார்க்கும் பொழுது வேதனை சற்று அதிகம் தான்!

Love Failure Motivation Quotes in Tamil

25.
இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை
என்பதை நாம் புரிந்து கொள்ளவே சிலர் நம் வாழ்வில் வந்து செல்கின்றனர்!

26.
எல்லாமே சில காலம் தான்!
அது உறவாக இருந்தாலும் சரி, உயிராக இருந்தாலும் சரி!

27.
உன் அலைபேசி கூட அறிந்துவிட்டது, நீ எந்தன் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டாய் என்று!

28.
ஏனோ காதல் பிரிந்தது, இணையாத தண்டவாளம் போல,
வாழ்க்கை கண்ணிர் பயணத்தில்!

29.
உன்னோடு நான் இருந்த நிமிடங்களை ரசித்தபடியே,
மீண்டும் அந்த நிமிடங்கள் வருமா என்ற ஏக்கங்களுடன் நானும் என் தனிமையும்!

30.
அன்பின் பூக்களுக்கு தான் விதையிட்டேன்!
அதில் பிரிவின் முட்கள் எப்படி முளைத்ததென்று இப்போது வரை விளங்கவேயில்லை!

Related Post