வாழ்வின் ரகசியங்களை கற்றுத்தரும் தனிமை கவிதைகளை (Thanimai Quotes in Tamil | Alone Quotes in Tamil ) இந்த பதிவில் காணலாம்.
- தனிமை சோக கவிதைகள்
- Feeling Lonely Quotes About Relationships in Tamil
- Loneliness Quotes in Tamil
- Alone Quotes in Tamil for Girl
- Alone Quotes in Tamil for Boy
- தனிமை பெண் கவிதை
- அனாதை கவிதை வரிகள்
தனிமை சோக கவிதைகள்
1.
தனிமை இனிமை என சிலர் சிரிப்பார் கொடுமை என பலர் அழுவர்.
2.
தனித்து விடப்படும் போது தான் நம் பலமும் பலவீனமும் நமக்கே தெரிய வரும்.
3.
தனிமையின் கண்ணீரில் சில நினைவுகளின் தாகம் தனிந்தது!
Feeling Lonely Quotes About Relationships in Tamil
4.
சில உறவுகள் நம்மை காயப்படுத்திய போதும்
நம்மை ஆறுதல் படுத்தும் ஒரே ஒரு உறவு தனிமை.
5.
தனிமை எதை புரிய வைத்ததோ இல்லையோ
இவ்வளவு காலம்மிக பெரிய முட்டாளாக இருந்து இருக்கிறோம் என்பதை புரிய வைத்தது.
6.
தனிமைகொஞ்சம் வித்தியாசமானது தான்
நாமாக எடுத்து கொண்டால் அது இனிக்கும்
அடுத்தவர் நமக்கு கொடுத்தால்அது கசக்கும்.
Loneliness Quotes in Tamil
7.
வலிகள் நிறைந்த வாழ்க்கையில்
என்றும் என்னுடனே ஏமாற்றம் அளிப்பது
என் இனிய நண்பன் தனிமை.
8.
தன் மனதை, தானே புரியும் தன்மை தனிமைக்கு மட்டும் தான் உண்டு!
9.
இவ்வுலகில் ஏதும் நிரந்தரம் இல்லை,
தனிமை ஒன்றைத் தவிர!
Read also – மனச்சோர்வு கவிதைகள்
10.
தனிமையில் இருப்பது இனிமையானது.
ஆனால், தனியே இருப்பது கொடுமையானது!
11.
நேரத்திற்கு ஏற்ப உன் நிழல் விழும் திசை மாறலாம்!
எந்த காலத்திலும் உன் தனிமையின் நிலை மாறாது!
12.
ஆழமான பல சிந்தனைகளையும்,
அழுத்தமான பல முடிவுகளையும் எடுக்க
மன உறுதியை வளர்த்தெடுத்தது என் தனிமை உலகம்.
13.
தனிமை சில நேரங்களில் வரம்,
தனிமை சில நேரங்களில் சாபம்,
தனிமை சில நேரங்களில் இன்பம்,
தனிமையே சில நேரங்களில் துன்பம்.
14.
தனியாய் நின்று ஜெயிப்பவனை விட
அதிக சக்தி வாய்ந்தவன் உலகில்
எங்கும் கிடையாது…!
15.
சில நேரங்களில் தனிமையை
தனிமையில் கடப்பது கடினம்.
சில நேரங்களில் தனிமை தான் இனிமை.
Alone Quotes in Tamil for Girl
16.
இன்பத்திலும்
துன்பத்திலும்
மனம் விட்டு பேச
ஒருவர் துணை இல்லாத போது தான்
உண்மையான அன்பின் பெருமை புரியும்.
17.
அதிகம் பேர் அருகில் இருந்தாலும்,
அதில் நீ இல்லை என்றால் அது தனிமையே!
Alone Quotes in Tamil for Boy
18.
ஒரு பெண்ணை
உன்னிடம் அதிகமாக பேச
அனுமதிக்காதே பின்
அவள் உன்னை அதிகமாக பேச
வைத்து விடுவாள்
தனியாக!
19.
நான் தனிமையில் இருக்கும் போது
எல்லாம் எனக்கு துணையாய்
என் நினைவில் வந்து
ஒட்டி கொள்கிறாய்.
20.
உன்னோடு பேசாத நொடிகளில் கூட
உன் நினைவோடு பேசி கொண்டு இருக்கிறேன்…
தனிமையும் இனிமையடி உன் நினைவினால்!
21.
பெருங்கனவும் பேரமைதியுமாய் கடக்கிறேன்,
தீர்ந்து போகா அவள் நினைவுக் காட்டில் தன்னந்தனியே!
தனிமை பெண் கவிதை
22.
தனிமையில் நான் இருந்தாலும்,
உன் நினைவு மட்டும் என்னைப் பின் தொடர்கிறதே,
சொல்லாத ரகசியத்தை சொல்லிச் செல்கிறதே!
23.
தனிமையைவிட கொடிது
உன்னோடு வாழ்ந்த அந்த நினைவுகளோடு,
நீ இன்றி வாழ்வதுதான்!
24.
நான் ஒன்றும் தனிமையில் இல்லை!
தனிமையோடு தான் இருக்கிறேன்!
25.
அடுத்தவர்களை காதலித்து வாழ்வதை விட,
தனிமையை காதலித்து வாழ்வதே மேல்!
அனாதை கவிதை வரிகள்
26.
யாருமில்லா நேரத்தில் எனை ஆறுதலாக அணைத்துக் கொண்டது
இந்த தனிமைதான் யாரோ ஒருவருக்காக எனை இன்று ஏங்க வைப்பதும்
இந்த தனிமைதான்
27.
மன அமைதிக்கான தனிமை
மகிழ்ச்சியானது ஆனால்
அன்பு காட்ட யாரும் இல்லாத தனிமை
மிகவும் கொடுமையானது.
28.
எனக்கு தனிமை கொஞ்சம்
அதிகமாகவே பிடிக்கும்
ஏன்னெனில் என் மனதை காயப்படுத்த
அங்கே யாரும் இல்லை.
29.
வலியால் வரும் கண்ணீர் கொடுமை என்றால்,
அந்த கண்ணீரை துடைக்க கூட ஆள் இல்லை என்பது,
அதை விட கொடுமை!
30.
உறவுகள் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள
என் உயிர் நட்பாக ஒட்டிக்கொண்டது தனிமை.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம், பிடித்திருந்தால் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் ஷேர் செய்யுங்கள்.
அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.
Related Post | தொடர்புடைய பதிவுகள்