வால்நட் நன்மைகள் | Walnut Benefits in Tamil

வாவ் இத்துணூண்டு வால்நட்டில் இவ்வளவு ஸ்பெஷலா?

நட்ஸ் எல்லோருக்கும் பிடிக்கும். எல்லா விதமான நட்ஸ்களையும் விட சுவையிலும் சரி, ஆரோக்கிய பலன்களிலும் சரி, வேறுபட்டது வால்நட் என்னும் அக்ரூட்.

இது நம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஆதி மனிதர்களின் உணவுகளில் முதன்மையானதாக இருந்தது வால்நட். ஏனென்றால் அவை நீண்ட நாட்கள் பசியாற உதவியது.

பார்ப்பதற்கு வால்நட் நம் நான்கு மூளைகளை ஒன்று சேர்த்தது போல தோற்றமளிக்கும்.

வால்நட் கொட்டைகள் நம் முன்னோர்களை அறிவாளிகளாக வைத்திருந்ததில் முக்கிய பங்காற்றியது. இந்த வால்நட் என்னும் அக்ரூட்டை ஊறவைத்து தொடர்ந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நீங்களும் ஐன்ஸ்டீன் மாதிரி பிரில்லியண்டா இருக்கலாம்.

வால்நட் நன்மைகள்

வால்நட்டின் சொந்த ஊர் வடஅமெரிக்காவின் கிழக்குப் பகுதி தான். வால் நட் மரங்கள் கிழக்கு வட அமெரிக்காவில் அதிகமாக காணப்படுகின்றன.ஆனால், தற்போது, சீனா, ஈரான், மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் அரிசோனா பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றது.

பார்ப்பதற்கு மூளை போன்றே இருக்கும் வால்நட் ஒரு வலிமையான உணவுதான். வால் நட்டை தமிழில் வாதுமைப் பருப்பு என்று அழைக்கிறார்கள்.

வால் நட்டில் ஒமேகா 3 fatty acid அதிகமாகயிருப்பதால் அது நமது லவ்வபிள் இதயத்திற்கு நன்மை அளிக்கிறது.

வால்நட்-ல் அதிகமாக இருக்கும் பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நம் கொழுப்பை எளிதில் கரைக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

வால்நட்டை எண்ணையாக பயன்படுத்தாமல், பருப்புகளாகவே சாப்பிட்டால் நீங்களும் ஸ்மார்ட் ஆகிவிடலாம்.

வால்நட்டை முதல் நாள் இரவு ஊற வைத்து தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதும் எதிர்பாராத அளவுக்கு உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். இப்படி அதிக நன்மைகள் கொடுக்கும் வால் நட்டில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்று பார்க்கலா.

வால்நட்டில் உள்ள சத்துக்கள்

10 கிராம் வால்நட்ல் உள்ள சத்துக்கள்

புரதச்சத்து / Protein1400   மில்லிகிராம்
கார்போஹைட்ரேட் / Carbs1300   மில்லிகிராம்
நார்ச்சத்து / Fiber630 மில்லிகிராம்
சர்க்கரை / Sugar230 மில்லிகிராம்
கொழுப்பு / Fat 6160 மில்லிகிராம்
கலோரிகள் / Calories62
தண்ணீர் / Water4%

வைட்டமின் ஈ, வைட்டமின் B6, பாஸ்பரஸ், மாங்கனீசு, ஃபோலிக் அமிலம், செம்பு என பலவிதமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சத்துக்கள் நிறைந்துள்ளன.

வால்நட் பருப்பில் தாமிரம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சிக்கு தாமிரம் மிகவும் அவசியமானது, அதே நேரத்தில் மெக்னீசியம் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு முக்கியமான செலினியம் அதிகமுள்ள பருப்பு வால்நட் இந்த செலினியம் தோல் ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்வதோடு புற்றுநோய் பாதிப்பில் இருந்தும் நம்மை காக்கிறது.

வால்நட் சாப்பிட்டால் என்ன பயன்கள் கிடைக்கும் தெரியுமா?

குழந்தைகளுக்கு தினமும் காலை ஐந்து பருப்புகள் கொடுத்து வந்தால் மூளையின் ஆற்றலை வால்நட் தூண்டி விடும். 

வால்நாட்டில் உள்ள புரதச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இரத்தத்தில் கலந்து மூளையை சிறப்பாக செயல்பட வைப்பதோடு ஞாபகமறதி பிரச்சனையும் இருக்காது.

பெண்கள் தினமும் வால்நட்டை ஊறவைத்து உட்கொண்டு வந்தால், மார்பக புற்றுநோயை மற்றும் கணைய புற்றுநோயின் அபாயத்தை தடுக்கும். 

வால்நட்டை பாலில் ஊறவைத்தோ அல்லது பாலில் கலந்தோ அல்லது சாதாரணமாகவோ சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை நீங்கிவிடும்.

வால் நட் உடல் வறட்சி, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, சருமத்தை எப்போதும் ஈரப்பதமாகவே வைத்திருக்கிறது. 

மேலும் வயிற்றில் உள்ள அமிலங்களை சீராக்கி அஜீரணகோளாறு, மலச்சிக்கல், பித்தப்பைகற்கள் போன்ற பிரச்சனைகளையும் நீக்குகிறது.

இளமை பொலிவைக்கூட்டி முதுமையைத் தள்ளி போடும் வால்நட் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். 

இதில் உள்ள வைட்டமின் பி 7 மற்றும் அயோடின் ஆகிய சத்துக்கள், தலைமுடி உதிர்வதைத் தடுத்து முடியை நன்றாக வளரச் செய்கிறது.

கர்ப்பிணிகளுக்கு வால் நட் தரும் நன்மைகள் | Walnut benefits for pregnancy in Tamil

Walnut benefits for pregnancy in Tamil

கர்ப்பிணிகள் அன்றாட உணவில் வால் நட் பருப்புகளை சாப்பிட்டால் கர்ப்பகால எடை அதிகரிப்பு, இரத்த அழுத்தம் அதனால் உண்டாகும் கருச் சிதைவு, குறைப்பிரசவம் சரி செய்வதோடு குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. வால்நட்டே தீர்வு.

தொடர்ந்து வால் நட் சாப்பிட்டு வந்தால், இனிப்புகளின் மீதான நாட்டம் குறைவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இதனாலும் உடல் எடை குறையவும் அதிக வாய்ப்புள்ளது.சிலருக்கு வால்நட்டை சாப்பிட்டால் ஒவ்வாமை வரக் கூடும்.

எனவே, கருவுற்ற நேரத்தில் முதன் முதலாக வால் நட்டை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.ஏற்கனவே வால் நட்டை சாப்பிடுபவர்களாக இருந்தால் கர்ப்ப காலத்திலும் தொடர்ந்து சாப்பிடலாம். அவர்களுக்கு எந்தப் பிரச்சனைகளும் வராது.

வால் நட் எண்ணையின் நன்மைகள்

வால் நட் எண்ணையின் நன்மைகள்

ஒமேகா – 3 நிறைவுறா கொழுப்பு அமிலங்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ளது வால் நட். இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் மற்றும் முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மிகப் பெரிய தீர்வினைக் கொடுக்கிறது.

தினமும் இரவு வால் நட் எண்ணையினை தோலில் தடவி, மசாஜ் செய்வதால் சரும வறட்சி நீங்கி சருமம் புதுப் பொலிவு பெறும். மேலும் தோல் சுருக்கத்தை நீக்குகிறது. தொடர்ந்து இதனை தோலில் தடவி வந்தால் தோல் சுருக்கங்கள் மற்றும் தோல் வறட்சி நீங்கி, இளமையோடு இருப்பதை நாம் உணர முடியும்.

அதேபோல தோலில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுகளுக்கு சிறந்த மருந்தாகவும் வால் நட் எண்ணெய் பயன்படுகிறது. மேலும், சொரியாசிஸ் நோய்க்கும் சிறந்த தீர்வாக வால் நட் எண்ணெய் திகழ்கிறது.

அதிக நேரம் விழித்திருப்பதாலும், தூக்கமின்மையாலும், கவலைகளாலும் கண்களைச் சுற்றி உருவாகும் கருவளையத்தை நீக்குவதோடு, நாளடைவில் கருவளையம் இல்லாத அழகு சருமத்தைத் தருகிறது வால் நட் எண்ணெய்.

வால்நட் எண்ணையின் மருத்துவ குணங்கள்

இளைஞர்களும் சரி, பெண்களும் சரி முடி உதிர்ந்தால் அதிகம் கவலைப்படுவார்கள். அவர்கள் கவலையின் அருமருந்து வால் நட் எண்ணெய். இதிலுள்ள ஒமேகா – 3 என்ற கொழுப்பு அமிலம் முடி உதிர்தலைத் தடுக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் அதிகமான நபர்கள் சந்திக்கும் பிரச்சனை பொடுகுத் தொந்தரவு அப்படிப்பட்டவர்களுக்கு வால் நட் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. தலையில் உள்ள சருமத்தை சுத்தப்படுத்தி அதிலுள்ள அழுக்குகளை நீக்குகிறது.

வால் நட் எண்ணையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பொடுகுத் தொல்லையில் இருந்து எளிதில் மீண்டு வரலாம். பொதுவாகவே நம் உடல் அணுக்களின் வளர்ச்சிக்கு பொட்டாசியம் சத்து மிக அவசியம்.

இந்தச் சத்து வால் நட் எண்ணையில் அதிகம் உள்ளதால், தலைமுடி உதிர்தலைக் கட்டுப்படுத்தி, அதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

வால் நட்டை எப்படி சாப்பிட வேண்டும்?

வால் நட் பருப்புகளை அப்படியே சாப்பிடலாம். அல்லது வறுத்தும் சாப்பிடலாம். வால் நட்டை துருவி, சாலட்டுகளின் மீது தூவி சாப்பிடலாம். வால் நட்டோடு, உலர் திராட்சை பழங்களைச் சேர்த்து காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

வால் நட் சுவை சற்று கசப்பாக இருக்கும். எனவே, கசப்பு சுவை பிடிக்காதவர்கள் தேனோடு சேர்த்து உணவாக உட்கொள்ளலாம் வால் நட்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் உடலுக்குத் தேவையான அனைத்து சக்தியையும் கொடுகிறது.

அதேபோல், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அது நம்மை பல்வேறு விதமான நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

ஒருவேளை உணவு சாப்பிட்டு விட்டால், உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து வால் நட்டை சாப்பிடலாம். சிலர் இரவு சாப்பிடுபவர்களாக இருந்தால் தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக வால் நட்டை சாப்பிடலாம். ஆனால், காலை வெறும் வயிற்றில் வால் நட்டை உண்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

வால் நட் தீமைகள்

வால் நட்டில் அதிக புரதச் சத்துக்கள் உள்ளதால், நார்ச்சத்து மிகுந்த உணவை சாப்பிட்ட பின் வால் நட்டை சாப்பிட்டால், வயிற்று வலி மற்றும் அஜீரண கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.அளவுக்கு அதிகமாக வால் நட்டை சாப்பிட்டு வந்தால் உடல் எடை கணடிப்பாக அதிகரிக்கும்.

வால்நட்டை அதிகமாக சாப்பிட்டு வந்தால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி ஒவ்வாமையினால் அவதிப்படுபவர்கள் மருத்துவரை அணுகி, அவரின் ஆலோசனையின் பேரில் வால் நட்டை சாப்பிட்டு வரலாம்.

நீங்கள் அதிகப்படியான வால்நட் உண்பவராக இருந்தால் அது உங்களுக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் IBS நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், வால்நட் கொட்டைகளை முழுவதும் தவிர்க்க வேண்டும், ஏனென்றால் அவை IBS நோயை மேலும் தீவிரமாக்கும்.

வால்நட் பருப்புகளில் கலோரிகள் அதிகம் உள்ளதால் அவற்றை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது உடல் எடையை கூட்டும். மேலும் அதிகமாக வால்நட் பருப்பு சாப்பிடும் போது அதில் உள்ள எண்ணெய் சத்து காரணமாக சிலருக்கு சில நேரங்களில் வயிற்றுப்போக்கையும் தூண்டலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

வால்நட்டை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?

பொதுவாக வால் நட்டை காலை நேரம் வெறும் வயிற்றில் சாப்பிடுவதே நல்லது. இரவு நேரம் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு பாலில் கலந்து சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டால் அவர்களுக்கு தூக்கமின்மையும் சரியாகும்.

நேரடியாக கொடுத்தால் குழந்தைகள் வால்நட்டை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்குப் பிடிக்கும் வகையில் செய்து கொடுக்க ஒரு அழகிய ரெசிபியும் பகிர்கிறேன் குறித்துக் கொள்ளுங்கள்.

ஹெல்தி வால்நட் லட்டு

ஹெல்தி வால்நட் லட்டு

செய்ய தேவையானவை:

வால்நட் 100 கிராம்

தேங்காய் – 1

பொரிகடலை – 100 கிராம்

நாட்டு சர்க்கரை அல்லது சீனி – 200 கிராம்

ஏலக்காய் பொடித்தது – சிறிதளவு

நெய் – தேவையான அளவு.

வால்நட், பொரிகடலையை ஆகியவற்றை கலந்து பொடி போன்று மையாக மிக்சியில் திரித்து எடுத்து, அதனோடு துருவிய தேங்காயை வறுத்து சேர்த்து, பொடித்த சீனி அல்லது நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும்.

தேவையான அளவு சூடான நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலந்து உருண்டைகளாக பிடித்தால் ஹெல்தி வால்நட் லட்டு ரெடி.

ஒட்டுமொத்த உடம்பிற்கும் தேவையான ஓராயிரம் நன்மைகளை கொண்டுள்ள வால்நட்டை நீங்களும் வாங்கி உண்டு வளமான வாழ்வை பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *