வேசம் போடும் போலி உறவுகளைப் பற்றிய சுயநலம் வாய்ந்த கவிதைகளை இந்த பதிவில் காணலாம்.
விரைவு இணைப்புகள்
- Fake People Quotes in Tamil
- Fake Friends Quotes in Tamil
- Fake Relatives Quotes in Tamil
- Selfish Fake Relationship Quotes in Tamil
Fake People Quotes in Tamil
1.
எந்த சூழ்நிலையலும் எவரையும் நம்பாதிருங்கள்…
இப்போதுள்ள மனிதர்கள் எல்லாம் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் துரோகமிழைக்கக் கற்றுக் கொண்டுள்ளனர்..!
2.
தேவைக்காக பேசுவோரையும் பிடிக்காது
தேவைக்காக பேசவும் தெரியாது.
3.
மிகவும் நம்பிக்கை வைத்த இடத்தில் தான்…
மிகவும் மோசமாக அவமானப்பட்டு நிராகரிக்கப்பட்டிருப்போம்…!!!
4.
ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள்;
ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்…
5.
இன்று பழகுவார், நாளை விலகுவர்!
உறவு தொடங்கும் முன்பே பிரிவிற்கும் தயாராகிக்கொள்!
6.
பல முகமூடி மனிதர்களால் சில நல்ல மனிதர்களும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறார்கள் இன்று…
7.
இந்த உலகத்தில் யாரையும் நம்பாதே…
உன்னிடம் ஒன்று பேசிவிட்டு வெளியே ஒன்று பேசும் கேவலமான மனிதர்கள் வாழும் உலகம் இது…!
8.
ஏமாந்து போறத விட பெரிய வலி,
நாம் ஏமாந்துட்டு இருக்கோம்ன்னே இருக்குறது தான்…!!!
9.
போலியானவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்கு முன்னால் நல்லதும், உங்களுக்குப் பின்னால் கெட்டதும் பேசுவார்கள்…
Fake Friends Quotes in Tamil
10.
என்னை பிடித்து பழகியவர்களை விட என்னை ஒரு பொழுதுபோக்காய் நினைத்து நடித்து பழகியவர்கள் தான் அதிகம்…
11.
தேவைக்காக பழகும் நண்பர்களை விட பழி தீர்க்கும் எதிரிகளே மேலானவர்கள்…
12.
நம்மை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துபவர்களைத் தான் நாம் தேவையானவர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறோம்..
13.
எவ்வளவு தான் பாசம் வைத்தாலும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு …
நாம் மூன்றாவது மனிதர்கள் தான்..
14.
கழன்றுவிழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்று நம்புகிறோம்..
15.
துரோகத்தின் முதல் விதை அதிகபட்ச நம்பிக்கையால்தான் தூவப்படுகிறது !!!
காதல் தோல்வி கவிதைகள் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யுள்கள்.
16.
போலி நண்பர்கள் நிழல் போன்றவர்கள் அவர்கள் உங்களை வெயிலில் பின்தொடர்வார்கள் ஆனால் இருட்டில் விட்டுவிடுவார்கள்…
17.
காயப்படுவதற்குப் பழகுங்கள் உங்களுக்காக நிறைய போலி நபர்கள் காத்திருக்கிறார்கள்.
18.
முகத்திற்கு முகமூடி போடுபவர்களை விட, அகத்திற்கு முகமூடி போடுபவர்கள் அதிகம் தான்..!
Fake Relatives Quotes in Tamil
19.
விஷத்தோடு பிறந்த பாம்பின் பிறவி குணத்தை மாற்ற நினைப்பது முட்டாள்தனம்..
அது போல் தான் சில உறவுகளும்..
20.
வேசம் போடும் உறவுகளுக்கு நடுவில் உண்மையான பாசம் தோற்றுத்தான் போகிறது…
மானங்கெட்ட மனசுக்கு தான் தெரியவில்லை அது பாசம் அல்ல வேசம் என்று…!!!
21.
நிரந்தரம் இல்லாத உலகம் சுயநலம் நிறைந்த உலகம் யாரும் யாருக்காகவும் இல்லை என்பது மட்டும் இங்கு நிஜம்…
22.
போலியான உறவுகளுடன் பொய்யான வாழ்க்கை வாழ்வதை விட ‘தனிமை’ ஒன்றும் கொடுமை அல்ல…!
23.
உண்மை இல்லாத உறவுகளுடன் ஒட்டி இருப்பதைவிட ஒதுங்கி இருப்பதே நல்லது…
25.
முகத்திற்கு முன்னால் பாசமும் …
முதுகிற்கு பின்னால் வேசமும் போடும் உலகம் இது…!
26.
சுடுகாட்டு பேயை நம்பு சொந்தகார நாயை நம்பாதே
Selfish Fake Relationship Quotes in Tamil
27.
தன் பொது நலத்திற்காக, நம்மை பலர் சுயநலமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள..!
28.
வாழ்க்கை நேர்மையாக உள்ளவனை அழ வைக்கிறது நேரத்திற்கு ஏற்ப மாற்றி பேசுபவனை வாழ வைக்கிறது…
29.
போலியானவர்கள் மேகங்கள் போன்றவர்கள், அவர்கள் களைந்து போனால் அந்த நாட்கள் வெளிச்சமாயிருக்கும்.
30.
கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால்,
அவர்கள் சொல்லும் பொய்கள் கூட உண்மையாகவே தெரிகிறது…!!
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம்
அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.