பேரிச்சம்பழம் நன்மைகள் | Dates Benefits in Tamil

பேரிச்சம் பழம் – மிகவும் பழமையான பண்டைய காலத்தில் பயிரிடப்பட்ட பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதிக முக்கியத்துவம் வாய்ந்த உணவாகும் கருதப்படுகிறது. 

மிகவும ஊட்டச்சத்து மிகுந்த பழங்களின் பட்டியலை எடுத்தால் அதில் கண்டிப்பாக பேரிச்சம்பழமும் இடம் பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தகைய சிறப்பு மிக்க பேரிச்சம்பழம் பற்றி முழுமையாக இந்த ஆர்டிகலில் தெரிந்து கொள்வோம்.

ஸ்டோன் பழம் ” என்ற சொல் பேரிச்சம் பழத்தை குறிக்க பயன்படுத்துகின்றனர். அதன் பொருள் பேரிச்சம் பழம் ஒரே ஒரு விதையை கொண்டது மேலும் அந்த விதையை சுற்றி சதைப்பற்றுள்ள பழம் இருக்கும். ஆகையால் பேரிச்சம் பழத்தை ” ஸ்டோன் பழம் Stone Fruit ” என்றும் அழைக்கின்றனர்.

இது உலர் பழ வகை (Dry fruit) மற்றும் சாதரண புதிய பழ வகை (Fresh fruit) ஆகிய இரண்டு வகைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

பேரிச்சம்பழம் வரலாறு

பேரீச்சம்பழம் குறைந்தது 50 மில்லியன் ஆண்டுகளாக இருந்ததாக புதைபடிவ பதிவுகள் காட்டுகின்றன. “DATES” என்ற வார்த்தை ஒரு கிரேக்க வார்த்தை ஆகும். டாக்டிலோஸ் என்பதிலிருந்து வந்தது.

“விரல்” என்ற பொருள் கொண்ட இந்த வார்த்தையை பேரிச்சம்பழத்திற்க்கு வைக்க காரணம், அதன் வடிவம். முட்டை போன்ற இதன் நீள்வட்ட வடிவம் விரல் நுனியை ஒத்து இருப்பதால் இதற்கு “DATES” என பெயரிடப்பட்டது.

முன்பு கூறியதை போல பண்டைய சாகுபடியில் பேரிச்சம்பழம் இருப்பதால், அதன் முதல்நிலை பற்றிய தகவல் சரியாக கிடைக்கப்படவில்லை. மேலும் பேரிச்சம்பழம் பைபிள்ளிலும் குரானிலும் அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளதால், இது ஒரு பாரம்பரிய பயிர் ஆக கருதப்படுகிறது.

அநேகமாக எகிப்து மற்றும் மெசபடோமியா இல் இருந்து இவ்வகை பழம் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அரேபியன் வளைகுடா மற்றும் மேற்கு இந்தியாவை ஒட்டிய பகுதியிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

பேரிச்சம்பழம் நன்மைகள்

பேரிச்சம்பழங்கள் கால்சியம், துத்தநாகம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற மிக முக்கிய தாதுக்களை கொண்டிருக்கின்றன. 

மேலும் அவை கார்போஹைட்ரேட்டுகள், உணவு நார்ச்சத்து, புரதங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவற்றில் நிறைந்துள்ளன. எனவே இவை மிகவும் சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.

எழுபது சதவீதம் கார்போஹைட்ரேட்டுகளால் (குளுக்கோஸ், பிரக்டோஸின் சம விகிதம்) ஆனவை இந்த பேரிச்சம். 

இத்தகைய பேரிச்சம்பழம் உண்பதால் நம் உடலுக்கு அவை அதிக ஊட்டமளிக்கிறது மற்றும் பல சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. 

அவற்றில் பைட்டோ கெமிக்கல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது, அவை கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

ஒரு கப் பேரிச்சம்பழத்தில் சுமார் 380 கலோரிகளும், பொட்டாசியத்தில் 27 சதவீதமும், தினசரி நார்ச்சத்து தேவையில் 48 சதவீதமும் உள்ளது. இத்தகைய நன்மையுள்ள பேரிச்சம் பழத்தை தினசரி உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் யாதென்று கீழே பார்ப்போம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது

இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க பேரிச்சம்பழம் உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும், குடலில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சும் விகிதத்தைக் குறைக்கவும் உதவும்.

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

தினமும் பேரிச்சம் பழம் உட்கொள்வதால் அல்சைமர் போன்ற மூளை சிதைவு நிலைமைகளை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இது மூளைக்கு தீங்கு விளைவிக்கும் பிளேக்குகளின் உற்பத்தியைக் குறைக்கும்.

நினைவாற்றல் மற்றும் கற்றலை அதிகரிக்க உதவுகிறது என்றும் ஆய்வு கூறுகிறது. மேலும் உங்கள் மூளையின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் உதவுகிறது .

உடல் எடையை குறைக்கிறது

பேரீச்சம்பழங்கள் உங்கள் உணவில் தினசரி சேர்த்து கொள்வதால் உங்கள் உடலில் கொலஸ்ட்ராலை உடனடியாகக் குறைத்து , உங்கள் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்

பேரிச்சம்பழங்கள் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பேரீச்சம்பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள், இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.

வால்நட் நன்மைகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுள்கள்.

இரத்த சோகையை குறைக்கும்

இரும்பு சத்து மிகுந்த பேரிச்சம் பழங்களை போன்ற உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால் இரத்த சோகையிலிருந்து நம்மால் மீண்டு வர இயலும்

நாள்பட்ட வயிற்றுப்போக்கு விளைவில் இருந்து விடுபட

கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தால் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் படி, நாள்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மாற்றவும் நிரப்பவும் பேரிச்சம்பழம் போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உதவும்.

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

கால்சியம் நிறைந்த பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொள்வதால் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை இயற்கையாக மேம்படுத்தும்.

அதிக ஆன்டிஆக்ஸிடென்ட் கொண்டது

பேரிச்சம்பழத்தில் அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் உள்ளது. பேரீச்சம்பழத்தில் காணப்படும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

செரிமானம் மேம்படும்

பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுப்பதன் மூலம் உங்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும். வழக்கமான குடல் இயக்கங்களையும் அதன் செயல்பாடுகளையும் ஊக்குவிக்கிறது.

பேரிச்சம்பழம் வகைகள்

பல வகையான பேரிச்சம்பழம் உலகளவில் உள்ளன. நிறம், சுவை, அமைப்பு, தோற்றம் இவற்றின் அடிப்படையில் பல வகையான பேரிச்சம் பழம் இன்று உலகளவில் உள்ளது. அவற்றுள் சில முக்கியமான வகைகளை பற்றி பார்ப்போம்.

மெட்ஜூல் பேரிச்சம்பழம் (Medjool Dates)

medjool dates

மொராக்கோவை பூர்வீகமாகக் கொண்ட இந்த வகை பேரிச்சம் பழம் மென்மையானது மற்றும் ஒட்டும் தன்மை கொண்டது.

எலும்பு வலுவுக்கும் மற்றும் மூளை செயல்பாட்டிற்கும் சிறந்த இந்த வகை பேரிச்சம்பழத்தில் இயற்கையான சர்க்கரை, நார்ச்சத்து, பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.மற்ற உலர்ந்த பழங்களைப் போலவே, நிறைய கலோரிகளை உள்ளடக்கியது.

கிமியா பேரிச்சம்பழம் (Kimia Dates)

kimia dates

கிமியா ஒரு கருப்பு நிற பேரிச்சம் பழம். இது ஈரானிய நாட்டை சேர்ந்த மிகவும் பிரபலமான பேரிச்சம் வகை. வாயில் வைத்தால் கரையும் தன்மையுடைய மிக மிருதுவான இந்த கருப்பு/கிமியா பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

●இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

●செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

●நன்மை பயக்கும் எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தது.

●மூளையின் செயல்பாட்டையும் செயல் திறனையும் மேம்படுத்துகிறது.

●நுண்ணுயிர் நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது.

கல்மி பேரிச்சம் பழம் (Kalmi Dates)

ஓமான் நாட்டு பூர்வீகத்தை சேர்ந்த கல்மி பேரிச்சம் பழம் இன்றளவும் மதீனாவில் அதிகப்படியாக சாகுபடியாகிறது. சின்ன உருளை வடிவிலான இந்த பேரிச்சம் பழம் வழக்கமான இனிப்பு தன்மை உடையது.

அஜ்வா பேரிச்சம்பழம் (Ajwa Dates)

ajwa dates

சவுதி அரேபியாவின் மதீனாவில் விளையும் மிக விலை உயர்ந்த பேரிச்சம் வகை அஜ்வா பேரிச்சம் பழம். வித்தியாசமான இலவங்கப்பட்டை சுவை கலந்த இந்த பழத்தின் சுவை மிகவும் இனிமையானது. மேலும் சாப்பிட மென்மையாகவும் இருக்கும்.

உலகில் மிக விலை உயர்ந்த பேரிச்சம் பழம் என்றாலும் அது தரும் நன்மைகளுக்கு அதன் விலை நியாயமானது என்றே கூறலாம். அஜ்வா பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பல. அவற்றுள் சில

●இருதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

●உங்கள் சோர்வை குறைத்து உற்ச்சாகமாக்கும்.

●ரத்த அழுத்தத்தை சீராக்கவும் பேரிச்சம்பழம் உதவுகிறது.

●எடை குறைத்தலை சுலபமாகுக்கும்.

●எலும்புகளை வலுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

முக்கியமாக அஜ்வா பேரீச்சம்பழத்தை கர்ப்ப காலத்தில் தவறாமல் சாப்பிடுவது கருப்பை தசைகளை செயல்படுத்தி, பிரசவத்தின் போது கருப்பை இயக்கத்திற்கு உதவுகிறது.

மற்றவை

மதீனா வில் விளையக்கூடிய கருப்பு நிற பேரிச்சம் வகை சபாவி (Safawi Dates), ஓமனி (Omini Dates) எனப்படும் ஜூஸி மற்றும் இனிப்பு வகை பேரிச்சம் , மிதமான இனிப்பு சுவை கொண்ட ஈராக்கின் அமெரி (Ameri Dates), வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் உலர்ந்த ஆப்ரிகாட்களின் கலவை போன்ற சுவையுள்ள ஜாஹிடி (Jahidi Dates) பேரிச்சம்பழங்கள் என மிகவும் வித்தியாசமான அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் வகைகள் இன்று புழக்கத்தில் உள்ளது.

பேரிச்சம் பழம் சாப்பிடும் முறை

ஒரு பேரிச்சம்பழத்தில் சுமார் 12 கிராம் பேரீச்சம்பழம் உள்ளது. உங்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற ஒவ்வொரு நாளும் 100 கிராம் பேரீச்சம்பழம் அல்லது இரண்டு முதல் ஐந்து பேரிச்சம்பழங்களை சாப்பிடுவது சிறந்தது.

நாள் ஒன்றிற்கு 100 கிராம் பேரிச்சம்பழம் உட்கொள்வது சிறந்தது. பேரீச்சம்பழ பழங்களை அப்படியே உட்கொள்வது விரும்பத்தக்கது, ஆனால் உங்கள் விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமென்றாலும் சமைத்து சாப்பிடலாம். அவற்றை மென்மையாக்க முதலில் 5 மணி நேரம் பாலிலோ அல்லது நீரிலோ ஊறவைப்பது பயனளிக்கும்.

நீங்கள் சூடான பாலில் பேரிச்சம் சேர்த்து பருகலாம். பாலில் பேரிச்சம் பழம் சேர்த்து சாப்பிடுவதால் தசைகள் வலுப்படும். மேலும் உங்கள் சருமம் பொலிவுறும். அல்லது நீங்கள் டேட்ஸ் சிரப் பயன்படுத்தி பேரிச்சம் பழத்தின் நன்மைகளை டேட்ஸ் சிரப் மூலமும் பெறலாம். இது உடல் சுறுசுறுப்பிற்கு மிகவும் பங்களிக்கிறது.

தற்போதைய கால பழக்கத்தின் படி நீங்கள் ஸூம்திஸ் ( Smoothies ) எனப்படும் பழச்சாறு முறையிலும் பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம். இல்லையேல் சாலட் ( Salad ) லும் கலந்து சாப்பிடலாம்.

மேலும் பேரிச்சம் சாப்பிட சிறந்த வழி எனர்ஜி பால்ஸ் எனப்படும் இனிப்பு வகை. லட்டு போன்ற தோற்றம் கொண்ட இந்த பந்துகள் முழுக்க முழுக்க உலர்ந்த பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்டவை. 

இவற்றை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் வந்து சேரும். நீங்கள் இந்த எனர்ஜி பால்ஸ் ஐ உங்களுக்கு பிடித்த விதமும் உங்களுக்கு ஏற்ற விதமும் நீங்களே வீட்டில் தயாரித்து கொள்ளலாம். இது மிகவும் சுலபமானதும் கூட.

பேரிச்சம்பழம் இரவில் சாப்பிடலாமா?

பேரிச்சம் பழம் இரவில் சாப்பிட மிகவும் நேர்த்தியான உணவு ஆகும். அதில் அதிகமாக உள்ள நார்சத்து எளிமையாக செரிமானம் ஆக கூடியது. 

மேலும் தங்களுக்கு இரவு நேரத்தில் பசியை தூண்டாமல் கட்டுப்படுத்தும். இதனால் உங்களுக்கு இடையூறற்ற தூக்கம் கிடைக்கும்.

12 நாள் தொடர்ச்சியாக பேரிச்சம்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்?

பேரிச்சம் பழத்தை தொடர்த்திச்சியாக சாப்பிடுவதன் மூலம் மேல் குறிப்பிட்டதை போல மூளை மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். 

செரிமான சக்தியை அதிகபடுத்துகிறது. சரும அழகையும் நலத்தையும் மேம்படுத்தும். எல்லாவற்றையும் விட உங்களுக்கு மிகுந்த ஆற்றலை குடுத்து உற்சாகமாக மாற்றும்.

பேரிச்சம்பழம் எப்போது சாப்பிட வேண்டும்?

பேரிச்சம் பழத்தை அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நன்மை தரும். 

பேரிச்சம் பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என்பதால் அவற்றை காலையில் சாப்பிடுவதன் மூலம் நமக்கு ஒரு நல்ல சக்தியின் ஆதாரமாய் அது திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *