25 தொலைதூர காதல் கவிதைகள் | Long Distance Love Quotes in Tamil

இந்த பதிவில் நாம் சிறந்த தொலைதூர காதல் கவிதைகள் (Long Distance Love Quotes in Tamil) பார்க்கப்போகிறோம்.

Long Distance Love Quotes in Tamil

1.
எத்தனை உறவுகள் என்னை சுற்றி இருந்தாலும்
என் உள்ளம் தேடும் ஒரே உறவு நீ மட்டும் தான்.

2.
தூரங்கள் பிரிவில்லை என் துணையே துயிலில் சந்திப்போம் வா என் கனவில்.

3.
உன் குரல் என்ன குற்றாலமோ பேச்சின் சாரல் மனதில் பட்டவுடன் உள்ளம் குளிர்கிறது.

4.
உன் அருகாமை மட்டுமல்ல உன் நினைவுகள் கூட என் கன்னம் சிவக்க வைக்கிறது.

5.
பெருங்கடல் நிலங்களை பிரிக்கிறது,
ஆன்மாவை அல்ல.

6.
உலகில் 7.125 பில்லியன் மக்கள்,
நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன்
நம் காதலுக்கு எந்த தூரமும் பெரிதாக இல்லை.

7.
உண்மையான அன்பில்,
மிகச்சிறிய தூரம் மிக அதிகமாகவும்,
மிகப்பெரிய தூரத்தை குறைக்கவும் முடியும்.
எல்லாம், மிக எளிதாக.

8.
தூரத்தை அளவிட முடியும்.
ஆனால் காதலால் முடியாது.
எனவே, அன்பு எப்போதும் தூரத்தை வெல்லும்.

9.
அன்பு வைத்தவர்களுக்கு மட்டும் எப்போதும் இரண்டு தண்டனை ஒன்று பிரிவு..!
மற்றொன்று நினைவு…!

10.
நேரில் பார்க்க ஆசை, பார்க்க முடியவில்லை!
கண்கள் இரண்டும் உன்னையே தேடுகிறது!

Long Distance Relationship Kavithai in Tamil

11.
நாம் இருக்கும் இடம் தூரமாக இருந்தாலும்,
உன் மனதில் என் மனதில் அருகில் இருக்கிறோம்!

12.
உரசிடும் காதலோ, விரல்கள் கோர்த்திடும் காதலோ தேவையில்லை! தூரமாயினும்…
உள்ளம் உருகி உள்ளத்தால் எல்லா நாளும் உன்னை நினைக்க தோன்றும் அன்பு போதும்…

Read alsoமனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

13.
உன் மனை முற்றத்தில் நீ மதிமுகம் காட்ட, நான் காத்திருப்பேன்!
அன்றே என் வானில், பெளர்ணமி!

14.
பிடித்தவர்கள் எல்லாம் அருகில் இருந்து விட்டால்,
நினைவுகளுக்கு என்ன மரியாதை.

15.
நீ என்னிடம் பேசவில்லை எனில்,
சில நேரம் அழுகை வரும்!
சில நேரம் கோபம் வரும்!
ஆனால் உன் நினைவுகள் மட்டும் என் மனதில் இருந்துகொன்டேதான் இருக்கும்!

16.
பார்த்துக் கொண்டிருக்கும் உறவை விட,
காத்துக் கொண்டிருக்கும் உறவுக்குத் தான் பாசம் அதிகம்!

17.
உனை எண்ணும் நெஞ்சுக்கு உறக்கமில்லை!
உனக்கான அழைப்பென்றும் முடிவதில்லை.

18.
மறக்கவும் வெறுக்கவும் முடியாத உறவே,
நீ இருப்பதோ, தூரமே!
உன் நினைவுகள் இருப்பதோ கண்ணீரிலே!

19.
நீ என்னை வீட்டு தூரமாக இருப்பதையே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அதைவிட பெரிய துன்பம் நீ என்னுடன் பேசாமல் இருப்பது!

20.
நான் இல்லாமல் நீ அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறாய்,
ஆனால் இங்கு நான் மரணத்தின் பிடியில் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே!

Long Distance Relationship Kavithai in Tamil

21.
அருகில் இருக்கும் அனைவரும் அன்பானவர்கள் இல்லை!
அன்பானவர்கள் அனைவரும் அருகில் இருப்பதில்லை!

22.
அன்று இரவெல்லாம் பகலுக்காக காத்திருந்தேன்!
உன்னை நேரில் காண்பதற்கு!
இன்று பகலெல்லாம் இரவுக்காக காத்திருக்கிறேன்,
உன்னை என் கனவில் காண்பதற்கு…

23.
எனக்காக இருக்கிறாய் என்பதை விட,
எங்கோ நீ இருக்கிறாய் என்பதே தற்போதைய ஆறுதல்!

24.
உன் அருகில் வாழும் பாக்கியம் எனக்கு இல்லை.
ஆனால் என் அன்பில் வாழும் அதிர்ஷ்டம் உனக்கு மட்டுமே உண்டு.

25.
விரல் தொடும் அருகில் இல்லாவிட்டாலும்,
தினம் தினம் மனதைத் தொடும் உன் நினைவுகளுடன் நான்.

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம், பிடித்திருந்தால் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் ஷேர் செய்யுங்கள்.

அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.

Related Post | தொடர்புடைய பதிவுகள்