திமிரு கவிதை வரிகள் | Attitude Quotes in Tamil

இந்த பதிவில், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை காட்டும் திமிரு கவிதை வரிகளை (Attitude Quotes in Tamil) பகிர்கிறோம். உங்களுக்கு பிடிக்கும் அழகான வரிகளைத் தேர்ந்தெடுக்க வாங்களேன்!

போலியான உபசரிப்புகளை விட
உண்மையான திமிர் அழகானது..
பெருந்தன்மையாக நடிப்பதை விட
இயல்பான அகம்பாவம் மேலானது..!

உண்மையாய் பழகும் நண்பனாய் இரு
இல்லாவிட்டால் நேருக்கு நேரி மோதும் எதிரியாய் இரு
ஆனால் முதுகில் குத்தும் துரோகியாய் மட்டும் இருக்காதே!

தரம் தாழ்ந்த சிந்தனைகளுக்கு பதில் சொல்ல அவசியமில்லை.
நாய் குறைக்கிறது என்று சிங்கமும் குறைத்தால், அது அசிங்கமாகிவிடும், சிங்கத்திற்கு!

நான் உண்மையில் நல்லவன்
நீ என்னை ஏமாற்றாத வரை

அடுத்தவன் என்ன நினைப்பான்னு வாழ ஆரம்பிச்சா
அப்பவே உன் நிம்மதி உன்ன விட்டு போயிடும்.

உண்மையாக இருப்பவர்கள் கொஞ்சம் திமிரோடு தான் இருப்பார்கள்…

உணமையை சொல்வதற்கே நாம்
சத்தியம் செய்ய வேண்டியதாக
இருக்கிறதே ஒழிய…
பொய்யை போகிற போக்கில் சொல்லிட
முடிகிறது …

என் பின்னாடி பேசுறவங்கள எனக்குரொம்ப பிடிக்கும் ஏன்னா
அவங்க என் முன்னாடிபேச பயப்படுவாங்க
அந்த பயம் எனக்கு ரொம்ப பிடிக்கும்..!!

தூக்கிவிட்டவரை மறக்காதே!
தூக்கி போட்டவரை
கனவில் கூட நினைக்காதே!!!

தனி ஒருவனாய் போராடி கரை சேர்ந்த பின் திமிராய் இருப்பதில் தப்பில்லை.

உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம்
உச்சிக்கு வரும் போது திட்டி தீர்க்கும்
சூரியனை மட்டும் இல்லை
மனிதனின் வளர்ச்சியையும் கூட..

எதையும் நம்பாதே எல்லாம் இங்கு
பாதியில் வீதியில்
விதியால் சதி செய்து
செல்லும் உறவுகளே…!

நான் சலித்து பின் செல்பவன் அல்ல,
எதுவாக இருந்தாலும் சாதித்து முன் செல்பவன்.

பத்தோடு பதினொன்னா இருக்க புடிக்காது.
கெத்தோடு தனியா இருக்கதான் புடிக்கும்.

அன்பு வைத்த உன்னை ஏமாற்றி சென்ற அவர்கள் தரும் வலிகள்,
துரோகங்கள் அனைத்தையும் கணக்கிற…!

விதியது விதியென…
பணியாது துணிவாய் நில்…!

என்னை தொலைத்தவர்களை நான் ஒருபோதும் தேடியதில்லை

யாருக்கு அஞ்சியும்
யாரிடம் கெஞ்சியும்
வாழ வேண்டாம்
எல்லாரையும் மிஞ்சியே வாழ்வோம்

Girl Attitude Quotes in Tamil

தூக்கி விட்டவரை மறக்காதே!
தூக்கி போட்டவரை கனவில் கூட நினைக்காதே!!!

பொறுமையா தானே இருக்கானு
ரொம்ப ஆட கூடாது.
என்னுடைய பொறுமைக்கு
ஒரு எல்லை உண்டு
வாய கிழிச்சுடுவேன் புரியுதா.

மத்தவங்க கால்ல விழுந்து வாழ்றதோ,
இல்ல கால வாரி விட்டு வாழ்றதோ
எப்பயுமே என்னோட அகாராதிலேயே கிடையாது..!

ஒரு பிரச்சனை என்றால் சூழ்நிலை என்று மட்டும் நினைக்காதீர்கள்..
சில நாய் வேஷமிட்ட நரிகளின்
சூழ்ச்சியாக கூட இருக்கலாம்..!!
என்பதை மறக்காதீர்கள்..!!

மனதில் பட்டதை பேசுவது திமிரு என்றால்,
அது என்னிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு!

உன்னமதிக்கிறவங்க கிட்ட
அன்பா இரு!!!
மதிக்காதவங்க கிட்ட எப்போதும்
திமிராவே இரு!!!

Attitude Gethu Girl Quotes

எனக்குணு ஒருதனி தமிர் இருக்கு
அதை யாருக்காகவும் எப்போதும் மாத்திக்க மாட்டேன்
மாத்திகவும் முடியாது பிடிச்சா பழகு பிடிக்கலைன விலகு

பண்ணுன தப்பை மறைக்க
சண்டை போடுறதுல
ஆண்கள் கில்லாடினா,

பண்ணுனது தப்பே இல்லனு
சண்டை போடுறதுல
பெண்கள் கில்லாடிகள்…

யாரையும் அடக்கி ஆள்பவளும் நான் இல்ல
யாருக்கும் அடங்கி போறவளும் நான் இல்ல.

நான் ஒன்னும் திமிரு புடிச்ச பொண்ணு இல்ல
திமிருக்கே புடிச்ச பொண்ணுடா

என்ன வேண்டாம் னு
நினைக்குறவங்க எல்லாரும் இனிமே எனக்கும் வேண்டாம்

எப்பையும்
யாருக்காவும்
எதுக்காகவும் நான்
கைகட்டி,வாய்மூடி
கெஞ்சி நிக்கனும்ங்கிற
அவசியம் எனக்கில்லை….

தனக்குனு ஒரு தனி திமிரு எப்பவுமே நமக்கு இருக்கனும்!!!
இல்லைனா வர்றவன் போறவன் எல்லாம் நம்மள ஏறி மிதிச்சுட்டு போய்டுவான்.

போலியான
உபசரிப்புகளை விட உண்மையான திமிர்
அழகானது..!
பெருந்தன்மையாக நடிப்பதை விட இயல்பான அகம்பாவம்
மேலானது..!

நமக்கு வேண்டியது எதுவும் நம்மள விட்டு போகாது,
நம்மள விட்டு போய்ருச்சுனா அது,, நமக்கானது இல்ல

என்மேல தப்பு இருந்தா மட்டும் தான் தாழ்ந்து ‘போவேன்.
தப்பு இல்லனா எவனா/எவளா இருந்தாலும் சரி ஏறி மிதிச்சிட்டு போய்ட்டேஇருப்பேன்

ஒரு பெண்ணை மரியாதையாக நடத்த தெரிந்தவன் கண்டிப்பாக
மரியாதைக்குரிய பெண்ணால் வளர்க்கப்பட்டவனாகத்தான் இருப்பான்.

Boy Attitude Quotes in Tamil

மனசு
முழுக்க வலியோடு
இருந்தாலும்
எதுவுமே நடக்கதாது
போல சிரித்து
சமாளிக்கும் அந்த
குணம்தான் ஆண்களின்
கெத்தே…!!

தனிமை கவிதை வரிகள்

இருக்கது ஒரு வாழ்க்க
அத ஊருக்காகவும் உறவுக்காகவும் வாழாம்
நமக்காக வாழனும்
நமக்கு பிடிச்ச மாதிரி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *