கணவன் மனைவி கவிதைகள் | 30 Best Husband and Wife Quotes in Tamil

இந்த பதிவில் நாம் கணவன் மனைவி கவிதைகள் (Husband and Wife Quotes in Tamil) பார்க்கப்போகிறோம்.

1.
கோபப்படுவது நீயாக இருக்கும் போது,
உன்னிடம் தோற்பது எனக்கு சுகமே!

2.
ஓங்கப்பட்ட கை இறக்கப்பட்டால்,
அந்த உறவின் மீது உள்ள அன்பு கோடிக்கணக்கானது!

3.
சண்டையை தொடங்குவது நீ,
சண்டையை முடிக்க ஒவ்வொரு முறையும் உன்னை சமாதானம் செய்வது நான்!

4.
அன்பின் மொழியில், கோபமும் காதலே!

5.
கோபத்திலும் எட்டி நிற்காமல்,
கிட்டவந்து கட்டியணைத்துத் திட்டும் அவன்,
ஓர் விந்தை!

Husband and Wife Quotes Tamil

6.
உன்னுடனான எனது சண்டைகளில்,
எந்தன் ஒட்டு மொத்த வேண்டுதல் நீ மட்டும் தானே!

7.
கோபமாய் நான் ஓரம் நிற்கும் போது,
உன் செல்ல கொஞ்சல் போதும் பெண்ணே,
என் கோபமும் வெட்கமாகி போகிறது உன்முன்னே!

8.
சின்னச்சின்ன ஊடல்கள்,
நம்மை பிரிவதற்கல்ல!
நம் காதலை வளர்ப்பதற்கு!

9.
தனியறையில் தணலாய் தகிக்கும் என்காதல் தீயை,
முத்தமழையில் குளிர்காயச் செய்கிறான்,
ஊடலில் நம் காதல்!

10.
அவன் இட்ட ஒற்றை முத்ததில்,
என் ஒட்டு மொத்த கோபமும் மழைத்துளியாய் சிதறியதே!

Read alsoதொலைதூர காதல் கவிதைகள்

11.
வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும்,
முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான் உலகின் ஆகச் சிறந்த காதலர்கள்!

12.
சிரிப்பை விட கண்ணீருக்கே மதிப்பு அதிகம்,
யாருக்காக வேண்டுமானாலும் சிரிக்கலாம்,
ஆனால் உன்மையான அன்பு இல்லாமல் யாருக்காகவும் கண்ணீர் சிந்த முடியாது..!!

13.
அக்கறை காட்டும் உறவு எப்போழுதும் தூரமாக தான் இருக்கும்.

14.
சுகங்களை மட்டும் பகிர்ந்து கொள்வது காதல் அல்ல..
சோகங்களை பகிர்ந்து கொள்ளும் போது,
துணையாய் நிற்பது தான் காதல்…

Husband and Wife Love Quotes in Tamil

15.
இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் மனதிற்கு பிடித்தவரை மறக்காது
காரணம் இதயத்திற்கு நடிக்க தெரியாது…
துடிக்க மட்டுமே தெரியும்…

16.
உன்னுடன் பேசிய நிமிடங்களை விட எப்பொழுது பேசுவாய் என்று ஏங்கி தவித்த நிமிடங்களே அதிகம்…

17.
உன்னையே தேடும் என் கண்களுக்கு உன் புகைப்படம் மட்டுமே ஆறுதல்…

18.
உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
உணர்த்துகிறது நீ இல்லாத வாழ்க்கை வெறுமை என்று…

19.
உடலுக்கு துணையாக மட்டுமல்ல மனதுக்கு துணையாகவும் வாழ்பவர்கள் தான் கணவன் மனைவி…

20.
வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வதற்கு ஆயிரம் உறவுகள் தேவை இல்லை
நம்மை உண்மையாக நேசிக்கும் ஒரு உறவு போதும்..

21.
விழுதுகள் மரத்தை தாங்கலாம்
வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும்
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும்
ஓர் ஆணுக்கு மனைவி தான்
ஓர் பெண்ணுக்கு கணவன் தான்
அதற்கு இணை வேறு எதுவும் இல்லை

Husband and Wife Relationship Quotes in Tamil

23.
அப்பாவி பெண் கூட
புத்திசாலி கணவனை ஆள முடியும்
ஆனால் புத்திசாலிதானம் உள்ளவளே
முட்டாள் கணவனை ஆள முடியும்.

Husband and Wife Kavithai in Tamil

24.
நான் கேட்காமல் கிடைத்த வரம் நீ
இப்போது வரமாக கேட்கிறேன்
உன்னை பிரியாத வாழ்வு வேண்டும் என்று

25.
எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை
எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன்
விட்டு செல்லவும் மாட்டேன் என்று இருக்கும் ஒரு ஆண்.

26.
நானும் நீயும் கணவன் மனைவியாக வாழ
இந்த காதல் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

27.
கணவன் பணக்காரனாக இல்லை
என்றாலும் பரவாயில்லை
கடன் காரனாக இருக்க கூடாது என்று
நினைப்பவளே உண்மையான மனைவி

28.
கணவன் மனைவி காதல் என்பது
கட்டி பிடித்தலிலும் முத்தம் இடுதலிலும் இல்லை
தன்னோடு வாழ்பவரின் வலியையும்
உணர்வையும் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது.

29.
உந்தன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்!
நீ என் மணாளனாக அமைவதற்கு மட்டுமல்ல,
என் தந்தையின் மறு உருவமாக அமைவதற்கும் தான்!

Husband Wife Love Quotes Tamil

30.
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாம்!
ஏனோ, எனக்கு அமிழ்தமாகவே தெரிகிறது அவன் முத்தம்!
அளவுக்கு மிஞ்சினாலும்…

Related Post | தொடர்புடைய பதிவுகள்