25 மதிப்புமிக்க சிந்தனை கவிதைகள் | Valuable Thoughts in Tamil

இந்த பதிவில் நாம் மதிப்புமிக்க சிந்தனை கவிதைகள் (Valuable Thoughts in Tamil) பார்க்கப்போகிறோம்.

1.
குறையை தனிமையில் சொல்,
குணத்தை கூட்டத்தில் சொல்!

2.
தோல்வி அடைந்தவன் மாற்ற வேண்டியது வழிகளைத் தான் இலக்கை அல்ல..

3.
வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே..
சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே நல்லது…!!!

4.
முயலும் வெல்லும்..
ஆமையும் வெல்லும் ..
ஆனால் முயலாமை என்றும் வெல்லாது…

Valuable Thoughts in Tamil One Line

5.
விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல.

6.
உன்னை மதிப்பவர்களிடம் தாழ்ந்து பேசணும்!!
உன்னை மிதிப்பவர்களிடம் வாழ்ந்து பேசணும்!!

7.
எதையும் நம்பாமல், ரசித்தலோடு நகர கற்றுக்கொண்டால்,
வழியெங்கும் வாசம் மட்டும் நிறைந்திருக்கும்!

8.
உழைத்து பெற வேண்டியது வருமானம்
உணர்ந்து பெற வேண்டியது தன்மானம்…

9.
அதிர்ஷ்டம் பல நேரங்களில் நம் விரல் பிடிக்க மறுக்கலாம்….
ஆனால் முயற்சியை மட்டும் நீ கைவிட்டு விடாதே…

10.
நோய் இல்லை என்று மனதில் உறுதி செய்..
மனம் போல் உடல் அமையும்…!

Also Readஒரு வரி தத்துவங்கள் | Tamil Quote in one line

11.
கெட்டவன் சாகும் போது தான் கஷ்டப்படுவான்..
நல்லவன் சாகுற வரைக்கும் கஷ்டப்படுவான்…

12.
வாழ வழியில்லை என்று புலம்பாதே
நீ பயணித்துக் கொண்டிருப்பது தான் உன் வாழ்க்கையென்று முன்னேறு…

13.
வானத்தை விட உயர்ந்தது இனிமையான சொல்
எனவேதான் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பர்…

14.
வாழ்க்கையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் வாழ்வதற்கு ஒரே காரணம்,
நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் தான்…

15.
பொய் சொல்லி தப்பிக்காதே, உண்மையை சொல்லி மாட்டிக்கொள்.
பொய் வாழவிடாது, உண்மை சாக விடாது.

16.
தோற்றாலும் நம்பிக்கையோடு இரு, ஆனால்!!!
யாரையும் நம்பி தோற்று விடாதே..
அதன் வலி மரணத்தை விட கொடியது.

17.
துரோகங்கள்!!!
மறக்கப்படுவதும் இல்லை,
மன்னிக்கப்படுவதும் இல்லை!!!

18.
நீ நடந்து போவதற்கான பாதை இல்லையே என்று கவலைப்படாதே
நீ நடந்தால் அதுவே ஒரு பாதையாக மாறிவிடும்…

19.
எந்த தவறை நீ எங்கு கண்டாலும் அதை உன்னிடம் திருத்திக்கொள் …

20.
கோபப்படுவதை விட அலட்சியமாக இருந்து விடுவது சிறந்த வழி!!!

21.
அன்பும் ஒரு நாள் தோற்று போகும் உண்மை இல்லாதவரை நேசித்தால்…

22.
கிடைத்த வாழ்க்கையை ரசித்து வாழத் தெரிந்தால்,
அந்த வாழ்வுக்கு பெயர்தான் அழகான வாழ்க்கை!

23.
உன்னைத் தவிர வேறு யாரும் உன்னை அவமானப்படுத்த முடியாது!!

24.
தொல்லை சொய்யாமல் என்றும் தொடர்பில் இருங்கள்…
யாரும் உங்களை தொலைக்க முயற்சிக்க மாட்டார்கள்…

25.
நதி நகர்ந்து கொண்டே இருக்கிறது,
பூ முளைத்துக் கொண்டே இருக்கிறது,
நீ தேடிக்கொண்டே இரு…

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம், பிடித்திருந்தால் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் ஷேர் செய்யுங்கள்.

அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.

Related Post | தொடர்புடைய பதிவுகள்