இந்த பதிவில் நாம் ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள் (Abraham Lincoln Quotes in Tamil) பற்றி காணலாம்.
ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்
நீங்கள் அங்கீகரிக்கப்படாதபோது கவலைப்பட வேண்டாம்,
ஆனால் அங்கீகாரத்திற்கு தகுதியானவராக இருக்க முயற்சி செய்யுங்கள்.
எல்லா மக்களையும் சில நேரம் ஏமாற்றலாம்,
சிலரை எல்லா நேரத்திலும் ஏமாற்றலாம்,
ஆனால் எல்லா மக்களையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.
எந்த மனிதனும் மற்றவரின் சம்மதம் இல்லாமல் இன்னொரு மனிதனை ஆளும் அளவுக்கு நல்லவன் அல்ல.

ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் கொடுங்கள்,
முதல் நான்கு நேரத்தை கோடரியை கூர்மைப்படுத்த நான் செலவிடுவேன்.
எப்படி இருந்தாலும், நீ நல்லவனாக இரு
நான் மெதுவாக நடப்பவன்,
ஆனால் நான் திரும்பி நடப்பதில்லை.

ஒவ்வொரு மனிதனின் மகிழ்ச்சியும் அவனது சொந்த பொறுப்பு.
சிலர் பெரிய வெற்றியை அடைகிறார்கள், மற்றவர்களும் அதை அடைய முடியும் என்பது அனைவருக்கும் சான்றாகும்.
ஆபிரகாம் லிங்கன் தத்துவங்கள்
நான் படிக்காத புத்தகத்தை தருபவன் என் சிறந்த நண்பன்.
தவறான பக்தியை விட உண்மையான தேசபக்தி சிறந்தது.
வாக்குச்சீட்டு தோட்டாவை விட வலிமையானது.
உங்கள் கால்களை சரியான இடத்தில் வைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், பின்னர் உறுதியாக நிற்கலாம்.
வாக்குச்சீட்டு தோட்டாவை விட வலிமையானது.
உங்கள் எதிர்காலத்தை கணிக்க சிறந்த வழி அதை உருவாக்குவதுதான்.
ஒரு மனிதனின் குணம் ஒரு மரத்தைப் போலவும்,
அவனுடைய புகழ் அதன் நிழல் போலவும் கருதினால்;
நிழல் என்பது நாம் நினைப்பது;
மரமே உண்மையான விஷயம்.