வலிகள் நிறைந்த வாழ்க்கை கவிதைகள் | Pain Life Quotes in Tamil

வலிகள் நிறைந்த வாழ்க்கை கவிதைகளை (Pain Life Quotes in Tamil) இந்த பதிவில் காணலாம்.

விரைவு இணைப்புகள்

Meaningful Pain Life Quotes in Tamil

1.
மரணத்தை காட்டிலும் கொடுமையானது மனக்கவலை.
மரணம் ஒருமுறை தான் கொல்லும்.
மனக்கவலை நொடிக்கு நொடி கொல்லும்.

2.
சிலரின் மௌனம் திமிரல்ல அவர்களுக்குள் இருக்கும் வலி…

3.
பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட,
பழகிய மனிதர்களிடம் இருப்பதில்லை…

4.
ஒருதுளி அன்பை கொடுத்து நூறுதுளி தண்ணீரை விலை கேட்பதுதான் இந்த வாழ்க்கை…

Pain Sad Quotes in Tamil

5.
காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை…

6.
உயிரோடு இருக்கிறேன் ஆனால் உடைந்து இருக்கிறேன் என்னவென்றே தெரியாத பல காரணங்களால்…

7.
விதியே…..
ஒருநாளாவது என்னை நீ நிம்மதியாக உறங்க வை….
அது என் மரணமாக இருந்தாலும் பரவாயில்லை…

8.
நான் நேசிக்கும் ஒரு உறவும் எனக்கு நிரந்தரமில்லை என்பது கடவுளால் அளிக்கப்பட்ட சாபம் போல…!

9.
நானே வறுமையில் வாழ்கிறேன்…
வறுமையோ என்னிடம் வசதியாய் வாழ்கிறது…

10.
ஏமாற்றம் எனக்கு புதிதல்ல.
நான் ஏமாறும் விதம்தான் புதிது சிலநேரம் அன்பால்…
சிலநேரம் நம்பிக்கையால்…

Love Pain Quotes in Tamil

11.
நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்துவிட்டால் நினைவின் மொழியும் பிரிவின் வலியும் தெரியாமல் போய்விடும்…

12.
என்ன நடந்தாலும் உன்னிடம் சொல்லியே பழகிவிட்டேன் நீ போனதை யாரிடம் சொல்ல?

13.
என் இதயமும் உணர்வற்று..
உன் நினைவால்..
என் உயிர் மட்டும் …
வாழுதடி…

Read also மனச்சோர்வு கவிதைகள்

14.
மறக்கத்தான் நினைக்கிறேன் உன்னை முடியவில்லை..
நீ என்னை மறந்து விட்ட போதிலும் கூட..

15.
நீ அளித்த அன்பளிப்புகளிலேயே அற்புதமான அன்பளிப்பு இந்த வேதனைதான்…

16.
பொய்யாக நேசிப்பவர்கள் கூட சந்தோசமாக இருக்கின்றனர்.
உண்மையாக நேசிப்பவர்கள் தான் அதிகம் காயப்படுகின்றனர்..

17.
எங்கு சென்றாலும் தொடரும் நிலவாய் என்னை எப்போதும் பின் தொடர்கிறது உன் நினைவுகள்…

18.
மறக்க நினைக்கும் நீயும்…
மறக்க முடியாமல் நானும்.

19.
விடைபெறாத என் வார்த்தைகளால்..
விடுபட்டு நிற்கிறது என் காதல் உந்தன் முன்…

20.
கனவு கலைந்தாலும் காட்சிகள் கண்ணில்….
காதல் தொலைந்தாலும் நினைவுகள் நெஞ்சில்…

Sacrifice Pain Life Quotes in Tamil

21.
அளவில்லாமல் சிரிக்க வைத்தவர்கள், ஒருநாள் அழவும் வைப்பார்கள்..!

22.
வாழ்க்கையில் மிகப்பெரிய கொடுமை
நாமாகவே கற்பனை செய்து
இன்னொருவரின் மேல் அளவு கடந்த அன்பு வைப்பது…!!

23.
உடலுக்கு உயிர் கூட சுமைதான்
நாம் உயிராக நினைக்கும் ஒரு உயிர் நம்மை மறந்து சென்றால்…

24.
ஒரு நாள் நீ நானாக வேண்டும்…!
நான் நீயாக வேண்டும்..!
அன்று உனக்கு புரியும் நான் படும் வேதனை…

25.
நேற்றுவரை முக்கியமாக இருந்த நாம்
நாளை யாரோவாக உணரப்படுவோம் என்று அறிந்த நொடி
அமைதியாக விலகிவிடுவது நல்லது.

Related Post | தொடர்புடைய பதிவுகள்