சிரிப்பு பற்றிய 10 கவிதைகள் | Smile Quotes in Tamil

இந்த பதிவில் நாம் சிரிப்பு கவிதை வரிகள் (Smile Quotes in Tamil) காணலாம்.

1.
எல்லா கஷ்டங்களும் தீர்ந்த பின்பு தான் சிரிப்பேன்
என நினைத்துக் கொண்டிருந்தால் சாகும் வரை எவராலும் சிரிக்க முடியாது…

சிரிப்பு பொன்மொழிகள்

2.
உன் மனம் வலிக்கும் போது சிரி, பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை.

3.
நமக்குள் ஆயிரம் சோகங்கள் இருந்தாலும் மற்றவரின் பார்வைக்கு நாம் சிரிப்பது போலத்தான் வாழனும்.

4.
சிரியுங்கள் ஆனால் விழுந்தவனைப் பார்த்து சிரிக்காதீர்கள்.

சிரிப்பு தத்துவம்

5.
சிரிப்பில்லா வாழ்க்கை சிறகில்லா பறவைக்கு சமம்.
பறவைக்கு அழகு சிறகு, நமக்கு அழகு சிரிப்பு.

Also Read – Silent Quotes in Tamil

6.
எந்நேரமும் உதடுகளில் சிறு புன்னகையை வைத்திருங்கள்,
அது தருகின்ற தன்னம்பிக்கையை வேறு எதனாலும் தர முடியாது!

புன்னகை கவிதை

7.
புன்னகையால் எவரையும் வெற்றி கொள்ள முடியாமல் கூட போய்விடலாம்…
ஆனால் உன் புன்னகையை வெற்றி கொள்ள எவராலும் முடியாது..!

8.
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்..
ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது..

சிரிப்பு பழமொழிகள்

9.
காயங்களோடு சிரிப்பது எளிதல்ல அப்படி சிரிக்க கற்றுக்கொண்டால் எந்த காயமும் பெரிதல்ல..

சிரிப்பு தத்துவங்கள்

10.
எதிர்பார்ப்பு இல்லாமல் மற்றவர்களை பார்த்து புன்னகை செய்யுங்கள்…
உங்களை விட அழகானவர்கள் இந்த உலகில் யாருமில்லை…!

Related Post | தொடர்புடைய பதிவுகள்