இந்த பதிவில் பழைய ஜோக் தங்கதுரையின் மொக்க ஜோக்ஸ்களை பார்ப்போம்.
Thangadurai’s Question and Answer Jokes
1. உலகத்திலேயே முதல் முறையாக எங்க கண் ஆப்ரேஷன் நடந்துச்சு?
ரொம்ப ஈஸி சார் கண்ணுல தான்
2. மரமே இல்லாத காடு என்னன்னு தெரியுமா?
சிம் கார்டு (Sim Card)
3. எம்பிளாய்மென்ட் வேலைக்கு எழுதி போட கால் லெட்டர் வந்துச்சு ஆனா நான் வேலைக்கு போகல என்?
முழு லெட்டர் வரல
4. ஒருத்தனை போலீஸ் புடிச்சு ஜெயில்ல போட்டாங்கலாம் அதுக்கு முன்னாடி
அவனோட தலை எண்ணெய் தேச்சிகாலம் என்?
என்னா அவன் ஆயுள் தண்டனை கைதி
5. ஒருத்தன் ஒரு பெரிய வீட்டுக்கு போனா
அந்த வீட்டுக்கு பச்சை கலர் சட்டை போட்டுக்கொண்டு
வெள்ளை கலர் வேட்டி கட்டிக்கிட்டு கை தட்டு தட்டு தட்டு தட்டுனா என்?
என்னா அந்த வீட்டில் காலிங்பெல் இல்லை
6. இரண்டு புலிக்கு சரியான பசி காட்டுக்குள்ள போச்சா ஒரு மான் கெடச்சது ஒரு புலி சாப்பிட்டதாம் இன்னொரு புலி சாப்பிடலை என்?
என்னா சபரிமலைக்கு மாலை போட்டு இருந்துச்சா
7. பசுமாடு என் பால் கொடுக்குதுனு தெரியுமா?
என்னா டீ காபி கொடுக்க முடியாதுல அதனால
8. டெய்லியும் ஒரு பசி வரும் அதை விட்டுவிடு
வருஷத்துக்கு ஒரு வாட்டி வரும் பசி அது என்ன பசி?
ஐப்பசி
9. மைக்கேல் ஜாக்சன் ஆடுவார் பாடுவார் ஆனா உக்கார சொன்னா உக்கார மாட்டார்?
என்னா,அவருக்கு தமிழ் தெரியாதுல
10. குயில் முட்டை போடும்
மயில் முட்டை போடும்
முட்டை போடாத பறவை என்ன பறவை?
ஆண் பறவை
11. திருப்பதிக்கு மொட்டை அடிக்கலாம்னு போனா அங்க ஃபுல்லா ஆம்பளைங்களா மொட்டை அடிச்சு இருந்தாங்க என்?
என்னா அது மேல் திருப்பதி
12. ஒருத்தன் நடு ரோட்டில் இருந்து லிப்ட் கேட்டானாம் ஆனால், கார் மோதிச்சாம் என்?
என்னா, அவன் நடு ரோட்டில் இருந்து கேட்டானாம்
13. ஒருத்தன் என்ன பண்ணாணாம் குடும்பத்துல சரியான கஷ்டம் ஸ்ட்ரைட்டா போயிட்டு Fanல தூக்கு மாட்டிகிட்டானாம் ஆனா சாகல என்?
என்னா அவன் தூக்கு மாட்டுனது Table Fan
14. ஒருத்தனுக்கு சேம பசியாம் ஸ்ட்ரைட்டா போயிட்டு மழையில நனைந்த உடனே பசி போயிடுச்சாம் என்?
என்னா அது அடை மழையாம்
15. சிரிச்சுக்கிட்டே இருக்கிற பூச்சி என்ன பூச்சி?
ஈ
கடி ஜோக்ஸ் படிக்கச் இங்க கிளிக் செய்யுங்கள்
16.ஒருத்தவங்க சூப்பரா சமைப்பாங்க ஆனா ஒரு காரம் பண்ணா மட்டும் சாப்பிட முடியாது என்?
என்னா அது நமஸ்காரம்
17. ஒருத்தன் ஆபீஸ் போயிட்டு பத்தாவது மாடியில் இருந்து போன் போட்டான் ஆனா போன் உடைவை இல்ல என் ?
ஏனா அவ அவங்க அப்பாக்கு போன் போட்டான்.
18. ரெண்டு பேரை சிங்கத்து கிட்ட மாட்டிக்கிட்டாங்கலாம் ஆனால் ஒருத்தனா சாப்பிட்டு இன்னொருத்தனை சாப்பிடலையாம் என் ?
ஏனா இன்னொருத்தன் வந்து லயன்ஸ் கிளப் மெம்பெர் (Lion’s Club Member) ஆம்.
19. எல்லா காயத்துக்கும் மருந்து போட முடியும் ஆனா ஒரே ஒரு காயத்துக்கு மட்டும் மருந்து போட முடியாது அது என்ன காயம்?
ஆகாயம்
20. ஒரு பாட்டு போட்டு ஆட முடியாது அது என்ன பாட்டு?
நிப்பாட்டு
21. ABCDல AB ஓடி போயிடுச்சுன்னா நிச்சயம் எத்தனை எழுத்து இருக்கும்
24 இல்ல 22 தான் என்?
என்னா A B O D போச்சுல
22. ஒரு டாக்டர் ஒருத்தனுக்கு ஊசி போட வந்தார் ஆனால் தடுப்பூசி போடாமல் எடுத்துட்டாங்க என்??
என்னா அது தடுப்பூசி
23. ஒரு வீட்ல மூணு பசங்க
first பையன் பால்ல தண்ணி கலந்தான் கண்டுபிடிச்சுட்டாங்க
ரெண்டாவது பையன் பால்ல தண்ணி கலந்தான் கண்டுபிடிச்சுட்டாங்க
ஆனா மூணாவது பையன் பால்ல தண்ணி கலக்கும்போது கண்டு பிடிக்கலையாம் என்?
என்னா அந்த பையன் பாலிடெக்னிக் முடிச்சு இருக்கானா
24. தீபாவளி அன்னைக்கு ஒருத்தன் என்ஜாய் பண்ணலாம் சொல்லிட்டு அவன் ரூம்ல பீர் வாங்கி வச்சி இருக்கான் அவங்க அப்பா வந்து அவன அசிங்க அசிங்கமாக திட்டி இருக்காரு பக்கத்து ரூம்ல அவன் தங்கச்சி பீர் வச்சிருக்கா ஆனா அவல திட்டவே இல்லையே என் ?
என்னா அது டெடி பியர் (Teddy Bear)
Thangadurai Kadi Jokes in Tamil with Answers
25. என்னதான் ஊரில் வெள்ளம் வந்தாலும் அந்த வெள்ளத்தில் சக்கரைப்பொங்கல் பண்ண முடியுமா!!!
26. இட்லி பொடி தொட்டு இட்லி சாப்பிட முடியும்
மூக்குபொடி தொட்டு மூக்கை சாப்பிட முடியுமா!!!
27. என்னதான் நாய்க்கு நாலு கால் இருந்தாலும் அதால கால் மேல கால் போட்டு உட்கார முடியாதாம்
28. துறைமுகத்தில் கப்பல் போனா என்ன ஆகும் முகம் நசுங்கி விடும்
29. உங்க ஊர்ல பொங்கலுக்கு லீவு விடுவாங்க இட்லிக்கு லீவு விடுவாங்களா???
30. Eyelineக்கும் லிப்ஸ்டிக்கும் சண்டை வந்துச்சா யாரு பெரியவங்கன்னு லிப்ஸ்டிக் ஜெயிச்சாம் என்னா வாய்மையே வெல்லும்
தங்கதுரையை இன்ஸ்டாகிராமில் பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்.
25 Best Periyar Quotes in Tamil | தந்தை பெரியார் பொன்மொழிகள்
20 Best Abdul Kalam Quotes in Tamil | அப்துல் கலாம் பொன்மொழிகள்
15 ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள் | Abraham Lincoln Quotes in Tamil